Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பழங்குடி மாணவர்கள் இலவச ஆசிரியர் பட்டய பயிற்சி சேர ஆட்சியர் அழைப்பு.

திருச்சியில் பழங்குடி மாணவர்கள் இலவச ஆசிரியர் பட்டய பயிற்சி சேர ஆட்சியர் அழைப்பு.

0

பழங்குடியின மாணவ, மாணவியர் இலவச
ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேர அழைப்பு.

திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மாணவ, மாணவியர் இலவச ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் தெரிவித்திருப்பது.

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் கல்வி பயின்ற, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவ
மாணவியர் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக
கல்வியியல் பட்டயப்படிப்பில் சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின், தமிழ்நாடு அரசு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து, அத்தகுதி தேர்வில் வெற்றி பெறுவோர், பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத்
தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவார்.

இத்திட்டத்தின் கீழ் மாணாக்கர் கல்வியியல் பட்டயப்படிப்பு பயில்வதற்காகும் கல்விக் கட்டணம், புத்தகக்
கட்டணம், சீருடைக் கட்டணம்,இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற
தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும்.
இத்திட்டத்தில் பயன்பெற அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்விச் சான்றிதழ் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ்
ஆகியவற்றுடன் பழங்குடியினர் நல திட்ட அலுவலர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ
விண்ணப்பிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை பழங்குடியின மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளலாம் .

இது குறித்த மேலும் விபரங்களுக்கு, திருச்சி மாவட்டம், துறையூர், பழங்குடியினர் நல, திட்ட அலுவலர் தா.ரெங்கராஜை நேரிலோ அல்லது 94438 37117 தொலை பேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.