காந்தி படத்திற்கும், காமராஜர் சிலைக்கும் அறம் மக்கள் நலச் சங்க நிறுவனர் தலைவர் ராஜா, இயக்குனர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி படத்திற்கும், காமராஜர் சிலைக்கும் அறம் மக்கள் நலச் சங்க நிறுவனர் தலைவர் ராஜா, இயக்குனர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரின் 45வது நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அச்சு ஊடக பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் மாநில நிர்வாகிகள் பிரபாகரன், அரசு, திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை,மாவட்ட நிர்வாகிகள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், செல்வகுமார், இனியவன், ஏகலைவன், மகளிர் அணி கஸ்தூரி, ராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிராஜ்தீன், முருகன், பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சி மன்னார்புரம் அருகிலுள்ள எல்பின் நிறுவனத்தில் அறம் மக்கள் நல சங்க நிறுவனத் தலைவர் ராஜா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில்
எல்பின் நிர்வாகிகள் மற்றும் அறம் மக்கள் நல சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.