பத்திரிக்கையாளர்களை நண்பர்களாக நினைத்து கூறியதை செய்தி ஆக்கியது வேதனை அளிக்கிறது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி:
பத்திரிக்கையாளர்களை நண்பர்களாக நினைத்து கூறியதை செய்தி ஆக்கியது வேதனை அளிக்கிறது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி:
திருச்சி இ.பி சாலையில் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகள் மேம்பாட்டிற்க்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின் சில தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது மேலிட உத்தரவின் படி பேட்டி வேண்டாம் என கூறிவிட்டார்.
பின்பு பத்திரிக்கையாளர்களிடம் நண்பர்களாக இயல்பாக பேசும்போது,
அனைத்து அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் கொரோனா ஊரடங்கு காலம் முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய முன்று நாட்கள் எப்போதும் போல் தலைமை செயலகம் சென்று அரசு அலுவலக பணி பார்த்து வருகிறோம் எனக் கூறினார்.
இதனை சில தொலைக்காட்சிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து
பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
தனிபட்ட முறையில் தலைமையில் இருந்து எந்த அழைப்பு வரவில்லை.
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் கழக தலைமை குழு எடுக்கும் முடிவுக்கு கழகத் தொண்டர்கள் அனைவரும் கட்டுபடுவோம்.
அனைவரும் கேள்வி கேட்டதால் என்னை காப்பற்றுங்கள் என பத்திரிக்கையாளர்களை நண்பர்களாக நினைத்து காப்பாற்றுங்கள் என விளையாட்டாக கூறியதை செய்தி ஆக்கியது வேதனை அளிக்கிறது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.