Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்மார்ட் கார்ட் திட்டத்தால் பொதுமக்கள் அவதி. அகில இந்திய பார்வர்ட் பிளக் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

ஸ்மார்ட் கார்ட் திட்டத்தால் பொதுமக்கள் அவதி. அகில இந்திய பார்வர்ட் பிளக் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

0

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்ட பொது செயலாளருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட கட்டுப்பாட்டு குழு தலைவராக இருந்த ATR தேவர்,
மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளராக இருந்த மார்க்கெட் முருகன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

தேவர் ஜெயந்தி விழா, மருது சகோதரர் குருபூஜை, ராஜராஜ சோழன் சதய விழாக்களை முப்புரம் விழாவாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது,
திருச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு உருவ சிலை அமைக்க மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருச்சியில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. நோய் தோற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு வேண்டுகோள் ,

ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். கைரேகை வைக்க சொல்லியும், கைபேசியை கொண்டுவர சொல்லியும் பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் திருச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகையா தேவர், மாவட்ட துணைத்தலைவர் விஜய் தீபன், மாவட்ட துணை செயலாளர் ராமர் தேவர், மாவட்ட பொருளாளர் பூர்ண குமார், மாநகர செயலாளர் வெற்றி, இளைஞர் அணி செயலாளர் ராம்குமார், மாணவரணி தலைவர் கிஷோர் மற்றும் பலர்.

 

Leave A Reply

Your email address will not be published.