ஆசிரியரை அடைந்து வைத்து பணம் கேட்டு மிரட்டும் திருச்சி கிம்ஸ் மருத்துவமனை. பரபரப்பு வீடியோ
ஆசிரியரை அடைந்து வைத்து பணம் கேட்டு மிரட்டும் திருச்சி கிம்ஸ் மருத்துவமனை. பரபரப்பு வீடியோ
திருச்சி தில்லைநகர் ஆறாவது கிராசில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி புதுக்கோட்டையை சேர்ந்த ஆசிரியர் நிக்கோலாஸ் என்பவர் சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
முதல் கட்டமாக சிகிச்சைக்காக சேரும்போது ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நன்றாகத்தான் உள்ளே என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என கூறும் போது மேலும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காட்டினால்தான் ( மொத்தம் 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்)
உங்களுக்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறி தற்போது மருத்துவமனையிலேயே அவரை அடைத்து வைத்துள்ளதாக அவர் தன்னை உடனடியாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்க தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது