திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருச்சி தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கத்தின் தலைவர் பாச. ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது :
தேவேந்திரகுல வேளாளர் அரசாணையையும் பட்டியல் வெளியேற்றத்தை நிறைவேற்றிட வலியுறுத்தியும், திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை மாலை 3 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோகினூர் தியேட்டர் நான்கு ரோடு அருகே தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை அமைக்க கோரியும், அரசை வலியு றுத்திகிறோம். இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். எங்கள் கோரிக்கைகளை நிச்சயம் அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் சங்கர், அய்யப்பன், எஸ்.எம்.சேட்டு, வேங்கூர் தனசேகரன், பொன் முருகேசன்,, அரவானூர் விச்சு, சுரேஷ்கண்ணன், தனம் உள்பட பலர் உடனிருந்தனர்.