Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்: வைத்தியலிங்கத்திற்கு வெல்லமண்டி நடராஜன் சிறப்பான வரவேற்பு.

0

திருச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம். கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டார்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் மகளிர் குழு பூத் அமைத்தல், மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்.பி., பேசினார்.

முன்னதாக திருச்சி வருகை தந்த வைத்தியலிங்கத்திற்க்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டின் பேரில் மாநகர் மாவட்ட சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் வைத்திய லிங்கத்திற்கு வெள்ளி வாள் நினைவு பரிசாக வழங்கினார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாரும், அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன்,
அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, கே.சி. பரமசிவம்,அவைத் தலைவர் அய்யப்பன், இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், நிர்வாகிகள் பத்மநாதன், ராஜ்குமார், கார்த்திகேயன், தமிழரசி சுப்பையா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, பூபதி, ஞானசேகர், நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி சண்முகம், வெல்லமண்டி பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வர்த்தக அணி செயலாளர் ஜெரால்டு, துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் இலியாஸ், ஜோசப் ஜெரால்டு, கந்தன், ராஜேந்திரன், கருமண்டபம்நடராஜன், அழகரசன் விஜய் அப்பாஸ், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, மற்றும் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.