Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாகிஸ்தான் நடிகைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி.

0

'- Advertisement -

Ad banner

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம்  நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

TVK ad

குறிப்பாக இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்து மிரட்டினார். நேற்றைய போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா தனது டுவிட்டரில் ” நாங்கள் கற்றுக்கொள்கிறோம், சரிசெய்துக்கொள்கிறோம், எங்களுக்காக ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருந்தார்.

பாண்டியாவின் இந்த டுவிட்டிற்கு கமெண்ட் செய்திருந்த பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி “அக்டோபர் 23ம் தேதி நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடன் தோல்வியை பெற்றுவிடுங்கள். அப்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. இதனை குறிப்பிட்டு இந்திய ரசிகர்கள் ஷின்வாரியை விளாசி வருகின்றனர்.

சாதனை மற்றொரு ரசிகர், ” உங்களது நாட்டில் ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில் இந்திய போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துள்ளீர்களே, அதுதான் இந்தியாவின் தரம் என பதிலடி கொடுத்துள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.