Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு நிறுவன நாள் விழா திருச்சியில் நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு 4ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.

Ad banner

இவ்விழா அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பொறியாளர் கணபதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பொறியாளர் சாம்ராட், மாநில பொருளாளர் பொறியாளர் சுரேஷ்கோபு உட்பட மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குழு தலைவர்களை அறிமுகம் செய்து குழு தலைவர் சிறப்புரையாற்றினார்.

மேலும் சிவில் இன்ஜினியர்ஸ்க்கு ஆப் அறிமுகம் செய்யப்பட்டு, தரச் சான்று புத்தகமும் வெளியிடப்பட்டது. மேலும் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில கூட்டமமைப்பு  தலைவர் பொறியாளர் அன்பழகன் சிறப்பாக செய்திருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.