Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மன்னார்புரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் பங்கேற்பு.

0

'- Advertisement -

திருச்சி மன்னார்புரம் இளைஞர்கள் நடத்தும் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மகளிரணி மாவட்ட தலைவி ரேகா,  ஜெயக்கர்ணா ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பாஜக மாவட்ட துணை தலைவர் சந்துரு இளைஞர்கள் சார்பாக விழாவினை ஏற்பாடு செய்து இருந்தார்.

மிகவும் சிறப்பான முறையில் செய்யப்பட்ட இந்த சிலை மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த விழாவினை விஜயகுமார், ரவிக்குமார், கார்த்திக்,வீரமணி, அலாவுதீன், சக்திவேல், தீயாகேஷ்.சதீஷ், ஏழுமலை உள்ளிட்ட பலரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மதியம் விழா குழு சார்பில் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.