Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காலாவதி தேதிகளை பார்த்து உணவு பொருட்களை வாங்க வேண்டும். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு பேட்டி.

0

'- Advertisement -

 

தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் – உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு பேட்டி

திருச்சியில் நாளை நடைபெற உள்ள உணவு மேலாண் திருவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி (வாக்கத்தான்) திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பேரணியிலும் பங்கேற்றார்.

இதில் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்த பேராசிரியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வெஸ்ட்ரி பள்ளி சாலை, நீதிமன்றம், தலைமை அரசு மருத்துவமனை, புத்தூர் வழியாக வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி வரை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் மக்களிடையே சரியான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு

விழிப்புணர்வோடு பாதுகாப்பான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தடை செய்யப்பட்ட உணவுகளை பயன்படுத்தக் கூடாது. தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும், லேபிளில் முழு முகவரி இருக்கா என்பதையும் பார்க்க வேண்டும், எந்த உணவு வகையில் கலப்படம் இருந்தாலும் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அவர் கூறிய போது நாளை( ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு மாவட்ட பிஷப்ஹீபர் கல்லூரி மைதானத்தில் உணவு திருவிழா தொடங்க உள்ளது. இதனை கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி, குறும்படம் போட்டி, பட்டிமன்றம் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த உணவு திருவிழாவில் சுமார் 75 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் உணவு பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு அரங்குகளும் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு அரங்குகளும், பாரம்பரிய உணவு வகைகளும், தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்து அந்தந்த மாவட்டங்களுடைய பிரபல உணவு வகைகளும் காட்சிப்படுத்தியும் குறைந்த விலையில் விற்பனைக்கும் வைக்கப்படும். என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.