

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்
மேலிட பொறுப்பாளர் கிட்டு தலைமையில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளரும்,
திருச்சி மேலிட பொறுப்பாளருமான இரா.கிட்டு தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்கள் அருள், முத்தழகன், நீலவானம்,மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், அரசு,
பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தமிழாதன், தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் சந்தானமொழி, மதனகோபால், செண்பகத் தமிழன், புல்லட் லாரன்ஸ், அன்புச்செல்வன், கனியமுதன், வக்கீல் சதீஷ் ,ஏகலைவன், மரியம் கமல், பொன் சங்கர், கலைச்செல்வன், பொன் முருகேசன், துவாக்குடி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றி,மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விரைவில் நியமிக்கப்பட உள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்காக பெற்ற விண்ணப்பங்கள் குறித்தும், புதிதாக விண்ணப்பங்கள்
பெற்றும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும், திருச்சி ஒருங்கிணைந்து
3 மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது திருச்சி மாநகர்மாவட்டம், வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் என நான்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விரைவில் பொறுப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர் என்பதையும் மேலிட பொறுப்பாளர் இரா.கிட்டு தெரிவித்தார்.

