Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சோனியா காந்தியின் பிறந்தநாள். பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

திருச்சியில் சோனியா காந்தியின் பிறந்தநாள். பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

0

'- Advertisement -

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 300 ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் பொரியாளர் அ.பேட்ரிக் ராஜ்குமார் , மாநில துணைத்தலைவர் , தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு, ஏற்பாட்டில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார்.

Ad banner


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி தனது 74 வது பிறந்தநாளை காங்கிஸ் தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரில் மத்திய அரசின் வேளான் திருத்த சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் கடந்த 14 நாட்களாக கடும் துயரில் வாடிக்கொண்டிருக்கும் போது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

TVK ad

இதனை அடுத்து திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடக்கவிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்துசெய்து விட்டு ஏழை எளியோருக்கு உதவிட திருநாவுக்கரசர் எம்பி.கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்,

அவரது வேண்டுகோளை ஏற்று காலையில் சுமார் 11 மணியளவில் திருச்சி பாராளுமன்ற அலுவலகத்தில் 300 ஏழைகளுக்கு இலவச வேஷ்டிகள் , சேலைகள் வழங்க பொரியாளர் அ. பேட்ரிக்ராஜ்குமார் உடனடியாக ஏற்பாடு செய்து வழங்கினார்.

இந்நிழ்சியில் AICC சந்திரன் , AICC பெனட் அந்தோனிராஜ், பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, ரெக்ஸ், மகிளா காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவி ஜெகதீஸ்வரி ,வக்கீல் சரவணன் ,இளைஞர் காங்கிரஸ் ஶ்ரீரங்கம் ஜெயம் கோபி, உறையூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலா, உறையூர் கிருஷ்ணா, அண்ணா சிலை விக்டர், உறந்தை செல்வம்,பிரேம், மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.