Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம். 2 பேர் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம். 2 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 8 பேர் கைது – டிக்டாக் பிரபலம் சூர்யா உட்பட 13 பெண்கள் மீட்பு.. திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை.


திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர்ஸ் என்கிற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்குதொடர் புகார் வந்தது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு , அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,
திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஸ்பா சென்டர்களில் தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினார்.

Suresh

இதில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள Sun Spa என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது,

அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது.

மேலும், ஸ்பா சென்டரில் நடத்திய சோதனையின் போது, அங்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி, திருப்பூரை சேர்ந்த சூர்யா உட்பட பல பெண்கள் இருந்தது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா உட்பட 13 பெண்களை மீட்டனர்.

மேலும், பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக ஸ்பா உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அந்த 18 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.