திருச்சி தாரநல்லூர் பகுதியில் குப்பைகளை அகற்ற பா.ஜ. கட்சியினர் மாநகராட்சி ஆணையருக்கு மனு .
திருச்சி தாரநல்லூர் பகுதியில் குப்பைகளை அகற்ற பா.ஜ. கட்சியினர் மாநகராட்சி ஆணையருக்கு மனு .
திருச்சி தாரநல்லூர் பகுதியில் குப்பை மேடுகள் உடனடியாக அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பாக
மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை .
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு பாரதி ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் தலைவர் சுதாகர் என்கிற வெங்கடேசன் கோரிக்கை மனு வழங்கினார், மனுவில்
திருச்சி மாநகராட்சி தாராநல்லூர் 15 வது வார்டு பகுதியில் இருக்கும் ஆறுமுகா கார்டன் முகப்பு பகுதியில் குப்பை மேடாக காணப்படுகிறது, இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிக எளிதில் தொற்றுநோய் மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,
எனவே மக்களின் நலன் கருதி மாநகராட்சி ஆணையர் ஆகிய தாங்கள் உடனடியாக அப்பகுதியில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் குப்பைகள் சேராத வண்ணம் சிறிய பூங்காவாக மாற்றி தருமாறு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.மேலும் ஆறுமுகா கார்டன் உள் பகுதியில் இருக்கும் சாலைகள் மழை காலங்களில் சேருகள் நிறைந்த சாலைகளாக மாறுகிறது இதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சேற்றில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது, எனவே இதனையும் மாநகராட்சி தலையிட்டு உடனடியாக சீர் செய்து சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று கோரிக்கை மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சிபி. சக்கரவர்த்தி, துணைத்தலைவர் ராஜ்திலக், இளைஞரணி செயலாளர் துவரக பிரசாத்,
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த திரைப்பட நடிகர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.