திருச்சி ரோட்டில் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யக்கோரி ம. நீ.ம. வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
திருச்சி ரோட்டில் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யக்கோரி ம. நீ.ம. வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
ரோட்டில் பார்கிங் கட்டணம் முறையை ரத்துசெய்ய வேண்டும்திருச்சி மாநகராட்சிக்கு மக்கள் நீதி மைய வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், கோட்ட தலைவர்கள், துணை மேயர், மேயர்கள் என எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லாததால் திருச்சி மாநகராட்சியின் தவறுகளை சுட்டக்காட்ட ஆட்கள் இல்லாததாலும்_மாநகராட்சி ஆணையர் மாநகரத்திற்கு புதியவர் என்பதாலும் சில தவறான திட்டங்கள், பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை திருச்சி மாநகராட்சியால் வகுக்கப்படுகிறதா என்ற அச்ச உணர்வு இயல்பாகவே ஏற்படுகிறது.
காரணம் சமிபத்தில் திருச்சி வில்லியம்ஸ் சாலையிலிருந்து தில்லைநகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை திருச்சி மாநகராட்சியால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட எந்த கட்டிடத்திலும் பார்கிங் வசதி இல்லை என்பதை மாநகராட்சி அதிகாரிகள் நன்கு அறிவர். மேலும் பார்கிங் எல்லாம் கோடோவுனாகவும், கடைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இது போன்ற கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனமே மேற்படி சாலையை ஆக்கிரமிக்கின்றன.
மேலும் கட்டிடங்களில் பார்கிங் இருந்தால் Mr.பொதுஜனம் ஏன் ரோட்டில் வாகனத்தை நிறுத்த வேண்டும்…? என்பதை ஏன் மாநகராட்சி அதிகாரிகள் சிந்திக்க மறந்தனர்…..?
இப்படியிருக்கையில் கோடிஸ்வர கட்டிட உரிமையாளர்களுக்கு சாதகமாக_பொதுமக்களுக்கு பாதகமாக மாநகராட்சியின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.
ரோட்டில் பஸ்டாண்ட் வைத்து நிர்வகிக்கும் நகரம் என்ற ஒரு அவச்சொல் போதும் சார். (மாயாஸ் ஹோட்டல் அருகில் உள்ள பேருந்து நிலையத்தை குறிப்பிடுகிறோம்)
எனவே திருச்சி மாநகராட்சி மரியாதைக்குறிய ஆணையர் அவர்கள் உடனடியாக இந்த பார்கிங் கட்டண முறையை ரத்து செய்து_பார்கிங் வசதி செய்யாத கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கேட்டுகொள்கிறோம்.
என மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர் S.R.கிஷோர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.