Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம், மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில்
சர்வதேச யோகா தின விழா .
பாஜக சார்பில் நடைபெற்றது.

சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர்,மாவட்ட சார்பில் வார்டு வாரியாக நிகழ்ச்சி நடைபெற்றது.

TVK ad

இது ஒரு பகுதியாக இன்று காலை 32வது வார்டு பாலக்கரை மண்டல் கீழப்புதூர் ரோடு துளசி கோனார் மில்லில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்வில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு மாவட்ட தலைவர் கோகுல முருகன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நாகேந்திரன், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் அரசு நேதாஜி, பாலக்கரை மண்டல் தலைவர் மல்லி செல்வம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மரிய வின்சன்ட், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.