Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தினர் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு.

0

'- Advertisement -

 

திருச்சி காவல் ஆணையரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு எதிராக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் புகார் : சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருச்சி காவல் ஆணையரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மீது புகார் அளித்துள்ளனர்.

அப்புகாரில் 2022 – ஆம் ஆண்டு ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகையை திருச்சி, தென்னூர், உழவர் சந்தை மைதானத்தில் நடத்திட அனுமதி வேண்டி கடந்த 28.01.2022 அன்று திருச்சி, தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு மாநில செயலாளர் அப்பாஸ் அலி அவர்கள் ஒரு மனு கொடுத்திருந்தார் . நாங்கள் தொழுகைக்காக கேட்டிருந்த அதே பகுதியை திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் குலாம் தஸ்தகீர் கடந்த 01.01.2022 அன்று தொழுகை நடத்துவதற்கு அனுமதி வேண்டி திருச்சி, தில்லைநகர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்துள்ளதாக அறியப்பட்டது.

இந்நிலையில் தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் நாங்கள் கொடுத்த மனுவிற்கு 09.04.2022 அன்று அனுமதி அளித்து தடையில்லா சான்று வழங்கினார்கள்.

தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏதோ ஒரு வழியில் ஆய்வாளரிடமிருந்து 10.04.2022 அன்று தடையில்லா சான்று பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஒரே பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதால் இது தொடர்பாக தில்லைநகர் சரக காவல் உதவி ஆணையர் அவர்கள் 22.04.2022 அன்று எங்களை அழைத்து அவர்கள் எங்களுக்கு முன்னரே அனுமதி கோரி மனு கொடுத்து உள்ளதாகவும், ஆய்வாளர் அதை அறியாமல் எங்களுக்கு அனுமதி அளித்து விட்டதாகவும் கூறி எங்களை சமாதானம் செய்து பக்ரீத் தொழுகைக்கு எங்களுக்கு அனுமதி அளிக்க முடியாத என கூறி எங்களுக்கு அளித்த தடையில்லா சான்றை ரத்து செய்வதாக கூறினார். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நாங்களும் அதற்கு ஒப்புக் கொண்டோம்.

அவ்வாறு அனுமதி பெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று அவர்களது முகநூல் பக்கத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டது யாருக்கு ? என்ற தலைப்பு போட்டு காவல் துறையினர் தடையில்லா சான்று பெறுவதில் நாங்கள் சூழ்ச்சி செய்ததாக தெரிவித்து அவர்கள் அனுமதி கோரி கொடுத்த கடிதத்தின் நகலையும், தில்லைநகர் ஆய்வாளர் கொடுத்த தடையில்லா சான்று அனுமதி நகலையும் இணைத்து பதிவு போட்டிருந்தார்.

அவர்கள் போட்ட அந்த பதிவில் தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் கொடுத்திருந்த தடையில்லா சான்று அனுமதி நகலில் ஆய்வாளர் கையெழுத்தின் கீழ் ஆய்வாளரால் எழுதப்பட்டிருந்த 10.4.2022 என்ற தேதியை 06.04.2022 என்று திருத்தம் செய்து பிரசுரம் செய்திருந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக அன்றைய தினமே எங்களது யூட்யூப் சேனலில் இது குறித்து விரிவாக விளக்கமளித்து ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தேன் . இவ்வாறு அரசு ஆவணத்தை பொது மக்களை ஏமாற்றி குழப்பம் விளைவித்து ஒரு சமூகத்தினரிடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரசு அதிகாரியின் கையெழுத்தை திருத்தம் செய்து சமூக வளைத்தளத்தில் வெளியிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான ஆவணங்கள் தயார் செய்ய வேண்டி கடந்த 29.04.2022 அன்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அவர்களுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த சங்கதிகள் தொடர்பான ஆவணங்கள் கோரி அதை கடந்த 30.05.2022 அன்று பெற்றோம் .

அவ்வாறு பெற்ற ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு வழங்கிய தடையில்லா சான்றில் தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் 10.04,2022 என்றே கையெழுத்து செய்துள்ளதும் அவர்களின் முகநூல் பக்கத்தில் அதே தடையில்லா சான்று நகலை 06 : 04.2022 என்று திருத்தி பிரசுரம் செய்திருப்பதும் ஆதாரங்களுடன் தெளிவுபடுகிறது. எனவே ஐயா அவர்கள் இவ்வாறு திருச்சி , தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் வழங்கிய தடையில்லா சான்றான அரசு ஆவணத்தினை திருத்தம் செய்து மோசடி செய்தது மட்டுமல்லாமல் அதை சமூக வளைத்தளத்தில் விளைவித்து குற்றம் புரிந்துள்ள மேற்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருச்சி மாவட்ட தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.