மணப்பாறையில்
பட்ட பகலில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய நபர் தப்பியோட்டம்.
மணப்பாறை போலீசார் வலைவீச்சு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகள் (பெயர் மாற்றம்
பேபி வயது 16 ) மணப்பாறை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி இவரது மகன் கேசவன் (வயது 22) இவருக்கும் மேற்படி சுவேதாவிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு வீட்டில் இருந்து பேபியை கேசவன் கடத்தி சென்றுவிட்டதாக பேபியின் தாய் சண்முகவள்ளி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேசவன் மற்றும் அவரது அம்மா,அப்பா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சுவேதாவை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் போக்சோ வழக்கு பதிவு செய்து கேசவன் மற்றும் அவரது அம்மா, அப்பாவை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த கேசவன் மணப்பாறையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பேபி திருச்சி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதை அருகே நடந்து சென்றபோது சற்றும் எதிர்பாரத விதமாக பின்னால் வந்த கேசவன் பேபியின் கழுத்து மற்றும் தொடை பகுதிகளில் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் பேபியின் அலறல் சப்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒடிவந்துள்ளனர்.
மக்கள் வருவதை அறிந்த கேசவன் கையில் வைத்திருந்த கத்தியை வீசிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவளைத்து ரத்தவெள்ளத்தில் இருந்த பேபியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பேபியை குத்திய கத்தி மற்றும் பேபியின் கைப்பையை கைப்பற்றி கேசவனின் தாயாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய கேசவனை மணப்பாறை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.