

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டில் அமைந்துள்ள அருளானந்தர் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி இடத்தினை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகா சபா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து காவல்துறையினர் முன்னணியில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சரியாக அளந்து வேலி அமைத்து தர வேண்டும் என அகில இந்திய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து விரைவில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி இடத்தை சரியாக அளந்து 15 நாள்களுக்குள் வேலி அமைத்து தருவதாக உறுதி அளித்து உள்ளனர்.இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் பொன்மலை மண்டல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறியுள்ளார்.

