Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைக்க வாய்ப்பு.

0

'- Advertisement -

இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Ad banner

இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 97 முறை (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 25 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.

முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார். பண்ட், டோனியின் சாதனையை தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முறியடித்து புதிய சாதனை படைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவர் இச்சாதனையை படைக்கும் பட்சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை அடைந்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.