திருச்சி ஜே.கே.சி.
அறக்கட்டளை, ஐசிஎப் பேராலயம்,வசந்தம் அரிமா சங்கம், பிஎம்எஸ் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் 32வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஜேகேசி அறக்கட்டளை நிறுவனரும் ஐசிஎஃப் பேராலயம் தலைவருமான ஜான் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
பி எம் எஸ் பவுண்டேஷன் நிறுவனர் அருள் வரவேற்புரை ஆற்றினார்.மாநில சட்ட ஆலோசகர் ரமேஷ்,ஜேகேசி கௌரவத் தலைவர் ரவிசங்கர்,நிர்வாகக் குழு உறுப்பினர் ரிச்சர்ட்,உலகத் தமிழ் திருக்குறள் பேரவை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்,ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சையது ஜாகீர் ஹசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற தாசில்தார் அப்துல் அஜீஸ், நளினி வீரமணி பிளானீட்டோரியம் நிறுவனர் வீரமணி,
காயிதேமில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கத் தலைவர் ரபிக் அகமது,போஸ்ட் மாஸ்டர் குமார்,ஜேகேசி. மகளிர் மேம்பாட்டு மைய தலைவர் சகுந்தலா,ஜோசப் கண் மருத்துவமனை ஆயர் டேவிட் பரமானந்தம்,கிறிஸ்தவ இலக்கியப் பேரவை தலைவர் சலாவுதீன்.
அலெக்சாண்டர், ஆனந்தராஜ், சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மனோகர் நன்றி கூறினார்.
இந்த விழாவில் இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.