Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அருண் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்.

0

'- Advertisement -

திருச்சியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

Ad banner

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு

பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி தில்லை நகர் 7வது குறுக்குத் தெருவில் உள்ள கார்த்திக் சித்த வைத்தியசாலையில் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.தமிழரசி சுப்பையா பண்டியன் ஏற்பாட்டில் இலவச சித்த மருத்துவ முகாம், கபசுர குடிநீர், சளி, இருமல், மருந்துகள் வழங்கல், இலவச உணவு, இலவச புடவைகள் வழங்கப்பட்டது.

திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நலத்திட்டங்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் மதிக்குமார், டாக்டர் கணேசன், டாக்டர் ஷீலா, டாக்டர் காளியம்மன், திமுக பிரமுகர்கள் தியாகராஜா, மருதுபாண்டி தலைமை நிலைய பேச்சாளர், கருணாமூர்த்தி, சிங்கம் விஜய், டாக்டர் சகுந்தலா, டாக்டர் சந்தானகிருஷ்ணன், அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், சிவக்குமார், அன்புராஜ், சுசிலா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.