Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இலவச வீட்டு மனை பட்டா வழங்க மஎஜ கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

0

'- Advertisement -

காயல் நகர மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

Ad banner

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது .

தூத்துக்குடி மாவட்டம் . காயல் பட்டிணத்தில் ஆண்டாண்டு காலமாக சொந்தமாக வீடு இல்லாமல் ஏழை மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் .

மேலும் வீட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசூல் செய்து வருகின்றனர்.

TVK ad

இதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டு வாடகை பணம் கொடுக்க முடியாமல் பலரும் மிகவும் சிரமம்பட்டு வருகின்றனர் .

தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு முதல்வர் மு க . ஸ்டாலின் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி காயல் பட்டிணத்தில் சொந்தமாக நிலங்கள் இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

காயல் பட்டிணத்தில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருக்கிறதா ?
என்று அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருந்தால் அதிகாரிகள் உடனடியாக நிலங்களை மீட்டு சொந்தமாக நிலங்கள் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .

எனவே தமிழக அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமைப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் மு க . ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.