கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அறிக்கை:-
மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நிரந்தர பொதுச் செயலாளர், ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நினைவு நாளான 5.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மா அவர்களை பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள
மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு
அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில், அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலிதாவின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறியுள்ளார் .