10ம் தேதி தேனி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி.
10ம் தேதி தேனி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
பின்னர் நிருபர்களுகளிடம் அவர் கூறியதாவது;-
இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி ஆதிசங்கராச்சாரியார் அவர்களுடைய சமாதி யினுடைய புனரமைப்பு செய்து நம்முடைய நாட்டிற்கு இன்று பாரதப் பிரதமர் அவர்கள் அர்ப்பணித்துள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டிலே நம்முடைய கேரள மாநிலத்தில் இருந்து நம்முடைய இந்து சமுதாயத்தை வளர்த்து வருவதற்காக அரும்பாடுபட்டு பின்னர் கேதர்நாத் கோவிலில் அவர் சமாதி அடைந்தார் என்பது நாம் எல்லாருக்கும் தெரியும்.
2013 ல் உத்தரகாண்டில் நடந்த மிகப்பெரிய வெள்ள அபாயத்தில் காரணமாக சமாதி சேதமடைந்தது. அதனை தற்போது நம்முடைய பாரத பிரதமர் புனரமைப்பு செய்து நம்முடைய தேசத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் சங்கராச்சாரியார் அவர்கள் சென்ற புண்ணிய தலங்கள் அனைத்திலுமே இன்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்திலே 16 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து இருக்கிறது. அதிலே முக்கியமாக தலைவர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். உதாரணத்திற்கு நம்முடைய ராமேஸ்வரம் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இருவரும் கலந்து கொண்டனர்.
அதேபோல் காஞ்சிபுரம்,திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருவிடைமருதூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் நான் பூஜையில் பங்கேற்று உள்ளேன்.
அது மட்டுமல்ல வருகின்ற 8- தேதி காலை 10 மணி அளவில் தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முல்லைப்பெரியார் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக நடத்த இருக்கிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்ய இருக்கிறோம்.
சமீபத்தில் மூன்று நாள்களுக்கு முன்பாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 137 அடி தண்ணீர் வந்த பிறகு நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததற்காக கேரளாவில் உள்ள அமைச்சர்கள் இருவர் திறந்து வைத்து உள்ளார்கள்.
முல்லைப் பெரியாறு அணை முழுக்க முழுக்க தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 999 வருட ஒப்பந்தத்தின் படி அந்த அணையை திறப்பதற்கு முழு அனுமதி நம்முடைய தமிழக அரசிடம் இருக்கின்றது.

அதனால்தான் ஒவ்வொரு முறையும் முல்லைப் பெரியாறு அணையை கதவை திறக்கும் பொழுது தேனி மாவட்டத்தின் கலெக்டரும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சரும் சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த அணையை திறப்பார்கள்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 10ஆம் தேதி வரை கொடுத்திருக்கக் கூடிய தீர்ப்பு அமல்படுத்த வேண்டிய தீர்ப்பில் மிகத் தெளிவாக 138.5 அடிக்கு வரை தண்ணீர் வரலாம்.
நவம்பர் 11-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அமர்ந்து மறுபடியும் என்ன விஷயம் பேசுவோம் என்று சொல்லி இருக்கின்றார்கள்.136 அடி எட்டிய போது எதற்காக அனையின் கதவை திறந்தீர்கள் என்று மாநில அரசிற்கு பல முறை கேள்விகள் வைத்துள்ளோம்.
ஆனாலும் நாங்கள் வைத்த எந்த ஒரு கேள்விக்கும் மாநில அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. அதனால்தான் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அவருடைய கூட்டணிக் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 5 விவசாய மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு துரோகத்தை செய்துள்ளார்கள்.
ஒரே காரணம் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கக்கூடிய பினராய் விஜயன் நம்முடைய மாநிலத்தை கேட்காமல் தவறை செய்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல இதற்கு முன்னாள் பல முறை முல்லை பெரியாறு அணையில் அவருடைய நீர்மட்டம் 142 அடிவரை சென்றுள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
136 அடியில் நிறுத்தினால் தமிழக விவசாயிகளுக்கு 5 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் கிடைக்கின்றது, இதனால் எந்த லாபமும் இருக்காது.
திமுக அரசு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்குப்போக்கு காரணத்தை வைத்துக் கொண்டு 136 அடியிலே அறையை திறப்பதற்கு வாய்மொழியில் வாக்கு கொடுத்து உள்ளார்கள். தற்போதும் மலுப்புகிறார்கள். ஆகவே இந்த செயலை கண்டித்து வருகின்ற 8-தேதி தேனி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை பாஜக விவசாய அணி சார்பாக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்த இருக்கின்றோம்.
நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒரு மாபெரும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.2021-2022 இந்த நிதி ஆண்டிற்கு தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து ஒப்புக் கொண்டிருப்பது 2500 லட்சம் சட்டத்தின்படி ஒப்பந்தம். இதுவரை நம்முடைய தமிழகத்திலே 2191 லட்சம் செய்து முடித்திருக்கிறார்கள். இரண்டு தவணையாக மத்திய அரசு பணத்தை வழங்குகிறார்கள்.
தற்போது என்ன நடந்திருக்கிறது என்றால் தமிழகத்தைச் சார்ந்த அதிகாரிகள் அக்டோபர் 27- ந்தேதி நம்முடைய முதல் தவணை கான சான்றிதழ்களை வழங்கி உள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் பணத்தை வழங்குகிறோம் என்று நவம்பர்2- நதே தி இரண்டாவது தவணையாக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான பணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளார்கள்.
ஸ்ரீரங்கத்தில் தான் மிக முக்கியமாக ஆதிசங்கராச்சாரியார் ஒன்பதாம் நூற்றாண்டிலே வந்து ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் எழுதினார். தகுதியுள்ள நபர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.
முக்கியமாக அணையத் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த முக்கியமான நடிகர் ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டார் அதாவது அணை பலமாக இல்லை. முதல்வர் தமிழக நடிகர்களை குறித்து கருத்து எழுதுவதை விட்டுவிட்டு தமிழக மக்கள் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.