சமயபுரம் No.1 டோல்கேட் ஹீலா’ஸ் பெண்கள் அழகு நிலையத்தில் இலவச அழகு கலை பயிற்சி மற்றும் தையல் பயிற்சி.
திருச்சி சமயபுரம் No 1 டோல்கேட்டில் ஹீலா’ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அழகு கலை நிலையத்தின் 2 வது கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக,
பொன்மலை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் A.அஜீம் கலந்து கொண்டு ஹீலா’ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழகு கலை நிலையத்தை திறந்து
வைத்து பெண்கள் தங்களது திறமைகளை வெளி கொண்டு வந்து சொந்த காலில் நின்று வாழ்கையில் முன்னேற வேண்டும், மேலும் இந்நிறுவனம் சார்பில் விதவை, மாற்றுதிறனாளி , கணவரால் கைவிடப்பட்ட ஏழை பெண்களுக்கு இலவசமாக அழகு கலை பயிற்சி, தையல் பயிற்சி வழங்கபடவுள்ளதை வெகுவாக பாராட்டி னார்.
இந்நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களை ஹீலா’ஸ் அழகு கலை நிலைத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமலதா,ஶ்ரீநாத் மற்றும் புதியபாதை அறக்கட்டளை நிறுவனர் தீபலட்சுமி ஆகியோர் வறவேற்றனர்.
மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .
புதியபாதை அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியன் பிள்ளை, ஆறக்கட்டளை நிர்வாகிகள், அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் மற்றும் திரளான நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி பாலக்கரையில் உள்ள
ஹீலா’ஸ் அழகு கலை நிறுவனத்தின் சார்பில் பல ஆதரவற்ற மாற்றுத்திறனாளி, விதவை,ஏழை பெண்களுக்கு இலவசமாக அழகு கலை பயிற்சி மற்றும் தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.