தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 44 – வது வணிகர் தின மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்க திருச்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 44 – வது வணிகர் தின மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்க திருச்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில் 44 -வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சி டி எம்.ஆர். அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பி.பாபு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சவுந்தர்ராஜன் என்கிற ராஜா சிறப்புரையாற்றினார்.
மெஸ்மர் காந்தன்
வெள்ளையன் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாநில பொருளாளர் பீர்முகமது, வழிகாட்டுதல் குழு தலைவர் ஷேக் தாவூத், டேவிட்சன்,
என்.டி கந்தன்,பஜார் மைதீன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் வருகிற மே 5- ம் தேதி நடைபெற உள்ள 44 வது வணிகர் தின மாநாட்டிற்கு சில்லறை வணிகம், விவசாயம் சிறு தொழில் உரிமை மீட்பு மாநாடு எனப் பெயரிடப்பட்டது. மேலும் அந்த மாநாட்டினை சென்னையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

