வேங்கூர் ஊராட்சியில் மழையால் சேரும் சகதியுமாக மாறிய சாலை ,பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்,உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் .அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்தி அறிவிப்பு .
வேங்கூர் ஊராட்சியில் மழையால் சேரும் சகதியுமாக மாறிய சாலை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கார்த்தி போராட்டம் அறிவிப்பு .
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நேற்று ஓரு நாள் பெய்த மழையால்.
வேங்கூர் ஊராட்சியில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் , பள்ளி மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக திருவெறும்பூர் வடக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் . கே.டி .கார்த்திக் கூறும்போது,
இந்த சாலைகளை செப்பனிட பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. மழைநீர் தேங்கி கிடப்பதால் தொற்று வியாதிகள் பரவுகின்றன. வாகனங்களில் செல்போரும் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். உயிர் பணி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது,
எனவே இந்த சாலைகளை உடனே செப்பண்ணிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்றாத பட்சத்தில் அதிமுக தலைமைக்கு எடுத்துச் சொல்லி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

