
திருச்சியில் கல்லூரி மாணவியியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அந்த கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி கூறி தொல்லை கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி இனி தன்னைப் பின் தொடர்ந்து வர வேண்டாம் எனக் கூறி வாலிபரை கண்டித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி கல்லூரி முடிந்து விட்டிற்கு சென்ற கல்லூரி மாணவியை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பின் தொடர்ந்து சென்று அண்ணா ஸ்டேடியம் அருகில் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளளார்.
ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவியை தனது வண்டி சாவியால் தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் அந்த கல்லூரி மாணவி லேசாக காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி கே கே நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.

