Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஏர்போர்ட் அருகே இன்று கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி சரண் .

0

'- Advertisement -

திருச்சியில் ஏர்போர்ட் அருகே இன்று தூங்கி கொண்டிருந்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி போலீஸ் நிலையத்தில் சரண் .

Ad banner

திருச்சியில் குடும்பத் தகராறில் தூங்கி கொண்டிருந்த

கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ளார். பிறகு அவர் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

திருச்சி விமான நிலைய பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50 ) கூலி தொழிலாளி இவரது மனைவி கலாராணி (வயது 42). இந்த தம்பதியினருக்கு இரண்டு 10 வயது மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால்

அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த செந்தில் குமார் தனது மனைவியிடம்

குடும்ப தகராறில் ஈடுபட்டு அவரை திட்டி உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.பிறகு இரவு நேரம் ஆன காரணத்தால் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கலாராணி சரியாக தூங்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு சமயத்தில் கலாராணி தூங்காமல் கண் விழித்து எழுந்து

உட்கார்ந்து கொண்டிருந்தார்.அப்பொழுது கணவரை பார்த்தபொழுது நிம்மதியாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்

கொண்டு இருந்தார்.இதனைப் பார்த்து எரிச்சல் அடைந்த கலாராணி ஒரு கட்டத்தில் இனி கணவருடன் வாழ முடியாது. நிம்மதி போய்விடும் என்று எண்ணினார். மேலும் செந்தில்குமார் தூங்கிகொண்டிருந்ததை பார்த்து கலாராணி தான் மனஉளைச்சலில் இருக்கும் பொழுது நீ நிம்மதியாய் தூங்குகிறாய் என்று நினைத்து

ஆத்திரமடைந்தார். பிறகு கலாராணி, சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து கணவர் செந்தில்குமாரின் தலையில் ஓங்கி போட்டதாகத் தெரிகிறது.இந்த சம்பவத்தில்

செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கலாராணி கணவன் செந்தில்குமார் இறந்ததை தெரிந்துகொண்டு ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்குச் சென்றார்.அங்குள்ள போலீசார் இடம் தன்னுடைய கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டேன் என்று கூறி சரணடைந்தார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கலராணியை கைது செய்து நடந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏர்போர்ட் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த செந்தில்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சரணடைந்த மனைவி கலாராணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது கணவரை கொலை செய்துவிட்டு மனைவியும் ஜெயிலுக்கு சென்ற சம்பவத்தால் குடி குடியை கெடுக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில்  இவர்களின் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் ஏர்போர்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.