முசிறியில் பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தி வீசப்பட்ட நிலையில் உயிருடன் மீட்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தில் கைப்பையில் வீசப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரத்தில் கிடந்த கைப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் பையைத் திறந்து பார்த்தபோது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரத்தில் கிடந்த கைப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் பையைத் திறந்து பார்த்தபோது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கட்டைப்பைக்குள் கிடந்த பச்சிளம் குழந்தையை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை என்பதால் அதன் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, பெண் குழந்தை நலமாக உள்ளது. உரிய மருத்துவ கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலையோரத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்டனர். குழந்தையை பெற்றெடுத்தவர்கள் யார், எதற்காக இவ்வாறு தனியாக விட்டுச் சென்றனர் என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தன. பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை கட்டைப்பைக்குள் வைத்து சாலையோரத்தில் வீசிச் சென்ற சம்பவம் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.குழந்தையை பெற்றெடுத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் விட்டுச் சென்றார்களா ? இரண்டாகும் பெண் குழந்தையாக பிறந்ததால் விட்டுச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

