திருச்சியில் 2 அதிகாரிகள் வீட்டில் 23 பவுன் நகை, பணம திருடிய பலே கில்லாடி பெண்கள் 2 பேர் கைது

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 அதிகாரிகள் வீட்டில் 23 பவுன் நகைகளை திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர வடிவேல். இவர் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகா இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்நிலையில் இருவரும் கடந்த 28ஆம் தேதி கோயம்புத்தூருக்கு சென்று விட்டு கடந்த 1 ஆம் தேதி திருச்சி வந்தனர். பிறகு மறுநாள் 2 ஆம் தேதி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் இருக்கும் பொழுது திருட்டு சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்த சாரதா என்பவர் இந்த வீட்டில் பணிப்பெண்ணாக முன்பு வேலை செய்ததாகவும், அவர் தனது தோழி மெர்சி என்பருடன் சேர்ந்து ரேணுகா வீட்டிற்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதா, மெர்சி ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம்போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது இதே போன்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டிலும் இந்த இரண்டு பெண்களும் கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்ததுள்ளது.இதே போன்ற அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மதியழகன் வயது 65 ஓய்வு பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி துறை அலுவலகத்தின் உதவியாளர் வீட்டில் இந்த இரண்டு பெண்களும் வேலைக்காரி போல் வேலை செய்து அந்த வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் பணத்தை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகைகள் மற்றும் ரூ 30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்

