புதிய எம்.சாண்ட் கிரஷருக்கு அனுமதி தரக்கூடாது, மேலும் குவாரியை நிரந்தரமாக மூட கோரியும் கிராம மக்களுடன் இணைந்து பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், 2 ஸ்ரீதேவி மங்கலம் வடக்கு கிராமத்தில் மணியாங்குறிச்சி செல்லும் சாலையில் புதிய எம்.சாண்ட் கிரஷருக்கு அனுமதி தரக்கூடாது என்பதை வலியுறுத்தியும், கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வரும் குவாரியை நிரந்தரமாக நிறுத்தக் கோரியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே
2 ஸ்ரீதேவி மங்கலம் பொதுமக்கள் மற்றும் பத்து ரூபாய் இயக்கம் (தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு) இணைந்து செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
நல்வழி வாரியர்
சதீஷ் குமார்
மா. செயலாளர்
ரமேஷ் இளங்கோ
பிரகாஷ் ஒன்றிய
செயலாளர் நாமக்கல்
மாவட்டம்.
பாலகிருஷ்ணன் செயலாளர்
அரியலூர்.
சேட்டு – திருச்சி மாநகர் செயலாளர்
பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்,

