திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நண்பருக்கு சாட்சி கையெழுத்திட்ட ரயில்வே ஊழியர் திடீர் தற்கொலை

திருச்சி சுப்பிரமணியபுரம் கருணாநிதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிவாசுதீன் (வயது 34).
ரெயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். இவர் தனது சக ஊழியர் ஒருவருக்கு கடன் பெறுவதற்கு சாட்சிக் கையொப்பம் போட்டுக் கொடுத்திருந்த நிலையில், கடன் கொடுத்த நபர் அவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிவாசுதீன் சம்பவத்து அன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்த புகாரின் பேரில் கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

