17 வது ஆண்டாக அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் அன்னதானம்
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது,
கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் திருச்சி யூனியன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் அன்னதானம் போன்ற பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றது ….
அந்த வகையில் 17 வது ஆண்டாக கார்த்திகை முதல் தேதி ஆன நாளை முதல் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வரை அம்மா மண்டபம் கோனார் சத்திரம் அருகே ஐயப்ப பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதேபோன்று திருச்சி சமயபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ..
இந்த அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர் ….
மேலும் தொடர்புக்கு :- 9443127051, 9443126600,
9786788786

