உறையூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் . தீபாவளி தினத்தில் மர்ம ஆசாமிகள் கைவரிசை
எலக்ட்ரிக்கல்- டீ கடையில் பொருட்கள் திருட்டு
திருச்சி உறையூர் சாலை ரோடு ருக்மணி தியேட்டர் அருகில் எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ நள்ளிரவு கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளனர்.இந்நிலையில் தீபாவளி தினத்தில் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர் கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து உறையூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதே போன்று திருச்சி உறையூர் சாலை ரோட்டில் டீக்கடை ஓன்று உள்ளது. இந்த டீக்கடையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு கடை பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம
ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால் கல்லாப்பெட்டியில் பணம் எதுவும் இல்லாத காரணத்தால் மர்ம ஆசாமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர் டீக்கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்து பார்த்த பொழுது ஒரு மர்ம ஆசாமி டீக்கடையில் புகுந்து கல்லாப்பெட்டியில் உள்ள பொருட்களை திருட முயற்சி செய்யும் காட்சி பதிவாகி உள்ளது இதனை உறையூர் காவல் நிலைய போலீசார் கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே உறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மளிகை கடை உள்பட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் திருட்டு சம்பவம் நடந்து இருப்பது உறையூர் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

