Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொழிலாளிகளிடம் ரூ. 5 கோடி தீபாவளி பண்டு மோசடி , தீபாவளி கொண்ட வழி செய்யுமாறு கலெக்டரிடம் கமலக்கண்ணன் தலைமையில் மனு

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொழிலாளிகளிடம்

Ad banner

ரூ. 5 கோடி தீபாவளி பண்டு மோசடி , தீபாவளி கொண்ட வழி செய்யுமாறு கலெக்டரிடம் கமலக்கண்ணன் தலைமையில் மனு

 

 

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

நாங்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்கள் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.

எங்களிடம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவர் நீண்ட காலமாக தீபாவளி பண்டு என்ற பெயரில் தினசரி பணம் வசூலித்து வந்தார்.

ஒவ்வொரு நபர்களிடமும் அவரவர் வசதிக்கு ஏற்ப ரூ. 100 முதல் ரூபாய் 2000 வரை தினசரி வசூல் செய்தார் வியாபாரிகள் ஜிபே மற்றும் வங்கி பரிவர்த்தனை முறைகள் மூலமாக பணம் அனுப்பி உள்ளனர்.

தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக கணக்கை முடித்து பண்டு தொகையை வழங்குவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணம் வழங்கப்படவில்லை . பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் தினசரி ரூ.1 லட்சம் என்ற அளவில் ரூ. 5 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

இதனால் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் சம்பந்தப்பட்ட நபர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். ஆகவே தாங்கள் (கலெக்டர்) தலையிட்டு மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்

மனு அளித்தபோது செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சபி அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.