Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பில் எந்த தொய்வும் ஏற்பட கூடாது என முதல்வர் விஜய் எச்சரித்த பின் மத்திய சிறையில் இருந்து தப்பித்த பலே கைதி

0

'- Advertisement -

கோவை மத்திய சிறையில் 400க்கும் மேற்பட்ட காவலர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கெனவே கர்நாடக போலீசாரிடம் இருந்து ஒருமுறை தப்பிய கைதி ராகவன், தற்போது இரண்டாவது முறையாகவும் போலீசாரின் பிடியிலிருந்து சிறை வாசலிலேயே தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Ad banner

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி சில கைதிகள் வலிப்பு நோய் வந்ததாக நடித்தனர். பிறகு 4 காவலர்களை தாக்கிவிட்ட 17 விசாரணை கைதிகள் தப்பினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சிறையில் உள்ள கைதிகளை கூட பாதுகாக்க முடியாத அவல நிலையில் காவல்துறையினர் இருப்பதாக விமர்சித்தனர்.

 

தனிப்படை மூலம் காவல்துறையினர் 15 பேரை 2 நாட்களில் கைது செய்தனர். இரண்டு பேர் சரணடைந்தனர். இந்த விவகாரத்தில் பொறுப்பு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவர் மீது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.அவரை அன்னூர் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அன்னூர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அன்று இரவு கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறை வாளாகத்தில் இருந்து கைதி ராகவன் திடீரென தப்பி ஓடினார். ராகவனை பந்தயசாலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி தேக்கம்பட்டி கிளை சிறை. காவலர்கள் குறைந்த அளவிலேயே பணியில் இருந்தனர்.

 

ஆனால் ராகவன் தப்பித்துள்ளது கோவை மத்திய சிறையாகும். 165 ஏக்கரில் உள்ள சிறையில் சுமார் 300 கைதிகளை அடைக்க முடியும். 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய சிறையில் இரண்டடுக்கு பாதுகாப்பு உள்ளது. முதல்கட்ட தகவல்படி ராகவன் முதல் நுழைவு வாயிலை கடந்து, இரண்டாவது நுழைவுக்கு செல்லும் போது தப்பித்துள்ளார். அருகிலேயே காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளது. அவர் பேருந்தில் வெளியூர் சென்றிருப்பாரா என்கிற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

முன்னதாக, “சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பில் எந்த தொய்வும் ஏற்பட கூடாது சிறை அலுவலர்கள் பொறுப்புகளை முழு கவனத்துடன் செய்ய வேண்டும். பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் விஜய் எச்சரித்திருந்தார். அதையும் மீறி மற்றொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.