வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவீரப்படுத்தபட்டு வருகிறது .
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி அவர்கள் இன்று செவ்வாய் கிழமை (27.10.2026) மண்டலம் 2 வார்டு எண்கள் 34 , 50 ஆலம் தெரு , பெல்ஸ் கிரவுண்ட் , காஜா பேட்டை, கீழ கிருஷ்ணன் தெரு ,கீழபுதூர் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் பொருட்டு டெங்கு புழு உருவாக ஏதுவான நீர் ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கவும் வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொள்வதுடன் புகை மருந்து அடிப்பான் மூலம் முதிர் கொசுகளை கட்டுப்படுத்தும் பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்து அப்பணிகளை தீவிரப்படுத்த நகர் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள டெங்கு கொசு ஒழிப்பு கூடுதல் பணியார்களை பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தினர். 
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீர் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள், தொட்டிகள், டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்ரை பொதுமக்கள் அகற்றவேண்டும் என தெரிவித்தார்.

