திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 29 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சம்பவத்தன்று 5வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது அந்த நடை மேடை அருகே ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்தது. இதனை பார்த்த ரயில்வே போலீசார் உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பு செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து 29 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

