Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விற்பனையாளர் , எடையாளர் இல்லாத கடையில் யார் இவர் ?நடவடிக்கை எடுப்பார்களா அமராவதி அதிகாரிகள்

0

'- Advertisement -

Ad banner

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்கள் ஒரு சில கடைகளில் பணிபுரிகிறார்கள் அவர்கள் சரியாக வேலை செய்கிறார்கள்.

 

ஆனால் ஒரு சில விற்பனையாளர்கள் கடையில் வெளியாளர்களை வைத்துவிட்டு அவர்கள் சொந்த வேலையை செய்து வருவது வருத்தத்துக்குரிய விஷயம் காரணம் அதிகாரிகள் கையூட்டு வாங்குவதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருப்பதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமே ….

மாதம் பிறந்தால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ இவர்கள் கொடுக்கும் கையூட்டு சரியாக போய் சேருகிறது ..

எடுத்துக்காட்டாக திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள ஓர் அமராவதி கடையில் அதிகாரி ஆய்வுக்கு சென்றுள்ளார்; ஆனால் அந்த கடையில் விற்பனையாளர் மற்றும் எடையாளர்கள் யாரும் இல்லை,படத்தில் உள்ள இந்த நபர் தான் அந்த ரேஷன் கடையில் உட்கார்ந்துள்ளார் . இவர் விற்பனையாளரும் அல்ல எடையாளரும் அல்ல அப்படி என்றால் இவர் யார் ?

மேலும் இது போல் திருச்சி மாவட்டத்தில் 90 சதவீதம் தவறு நடக்கிறது என்று சொல்லவில்லைஆனால் 10% நபர்கள் இது போல் செய்தால் அந்த 90 சதவீதம் நபர்களும் கெட்டுப் போக வாய்ப்பவாய்ப்பு உள்ளது . .

எனவே இந்த பதிவினை உடனடியாக ஏற்று அமராவதி இணைப்பதிவாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . . .

திருச்சி மாவட்ட இணைப்பதிவாளர் இதனை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.