கற்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற காலை உணவு திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் . அகில இந்திய ஆசிரியர் கூட்டணி ரெங்கராஜன் வேண்டுகோள்

கற்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற காலை உணவு திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் . அகில இந்திய ஆசிரியர் கூட்டணி ரெங்கராஜன் வேண்டுகோள் ..
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. இன்றைக்கு உள்ள காலகட்டத்தில் மாணவர்களை ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வழிநடத்துவது என்பது மிகுந்த சவாலாக உள்ளது. கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் தொய்வின்றியும், அரசுக்கு அனுப்ப வேண்டிய புள்ளி விவரங்கள் தொய்வின்றியும், செய்து கொண்டிருக்கும் சூழலில், காலை உணவு திட்டத்திலும் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் போது கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படுவது நிச்சயம். ஏனெனில் காலை உணவு திட்டத்தில் உணவு வந்தவுடன் பதிவிடுவதும், மாணவர்கள் உணவு உண்ணும் போது பதிவிடுவதும், பிறகு முடிக்கப்பட்டது என்று பதிவிடுவதும், என காலை 6.30 மணி முதல் 9.15மணி வரை நேரத்தை செலவிடும்படி உள்ளது. இந்த திட்டம் மாணவர்களுக்கு பயன்தரும் திட்டமாக இருந்தாலும் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் போது பள்ளி வேலை நேரத்தில் அவர்களின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படுவது இயற்கை. எனவே பரிமாறுவதற்கு ஆட்கள் நியமனம் செய்தது போலவே கூடுதலாக ஒருவரை நியமனம் செய்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். கூடுதலாக ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி காலை உணவு திட்டத்திற்கு தனியாக ஒருவரை நியமனம் செய்து ஆசிரியர்களை அப்பணியில் இருந்து விடுவித்து மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கண்டபணியை கொடுத்து, கல்வி பணியை எடுக்காதே என்ற முழக்கத்தை மீண்டும் கெடுக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர் சமுதாயத்தை தள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

