ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமாரின் மனைவி (மண்டல குழு தலைவர்) ஆண்டாள் வார்டில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி..

ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமாரின் மனைவி (மண்டல குழு தலைவர்) ஆண்டாள் வார்டில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி…
திருச்சி மாநகராட்சி திருவரங்கம் மண்டலம் – 1 நான்காவது வார்டு கவுன்சிலரும் மண்டல குழு தலைருமன ஆண்டாள்,இவரது கணவர் தற்போது ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில் கைதான பகுதி செயலாளர் ராம்குமார் ஆவார். இந்த வார்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு ராகவேந்திரா கார்டன் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சிலர் விபத்துகளிலும் சிக்கி உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அந்த வார்டு பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,
கொசுக்களையும் டெங்குவையும் ஒழிப்போம் என்று தெரு தெருவாக சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் இந்த வார்டு பகுதியில் ஆய்வு செய்து பன்றிகளின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம்
4வது வார்டு ராகவேந்திரா கார்டன் தெருவில் பன்றிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
இது சம்பந்தமாக ஸ்ரீரங்கம் சுகாதார அலுவலரிடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்..

