திருச்சியில் ஆசை வார்த்தை கூறி 62 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி மற்றும் அவரது மனைவி

திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கை மாற்றி விட்டனர்; கைதாகி ஜாமீனில் வந்துள்ள தனியார் நிறுவன ஊழியர் செல்போனில் 62 பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளது … தம்பதி மீது சைபர் கிரைம் போலீசில் பெண் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு.
திருச்சி கீழகல்கண்டார் பகுதியை கோட்டை சேர்ந்தவர் ராதா (வயது 37). இவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில், ‘நான் எனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஒரு தனியார் நிறுவனத்தில் உள்ள காப்பீட்டு பிரிவில் பணியாற்றிய போது யுவராஜ் (வயது 40) என்பவர் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றினார். அவர் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக என்னிடம் கூறினார். இதை நம்பி நான் அவரிடம் பழக ஆரம்பித்தேன்.ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். சில மாதங்கள் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்.
அப்போது என்னிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் ,ரூ.3 லட்சம் மதிப் புள்ள நகைகளை யுவராஜ் வாங்கினார். அடிக்கடி நாங்கள் தனிமையில் இருக்கும்போது செல்போனில் படம் பிடிப்பார். கணவர் தானே என்று சாதாரணமாக விட்டு விடுவேன். பின்னர் ஒரு நாள் அவரது செல்போனை பார்த்த போது அதிர்ச்சியில் நிலை குலைந்தேன். அவரது செல்போனில் என்னைப் போல 62 பெண்களின் ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள் இருந்தன. அதன் பிறகு யுவராஜ் குறித்து விசாரித்தபோது,அவன் ஒரு சரியான மோசடி பேர்வழி என்பது தெரிந்தது. 
உண்மையில் அவர் மனைவியை பிரிந்து வாழவில்லை. மனைவியை பிரிந்து வாழ்வது போல் பிற பெண்களுடன் நடித்துள்ளார். உண்மையில் கணவன் -மனைவி இருவரும் சேர்ந்து பல பெண்களிடம் இருந்து ரூ.91 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கபளீகரம் செய்துள்ளனர் ..
யுவராஜின் மனைவி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவரும், நீயும் இருந்த வீடியோ, பேசிய ஆடியோ அனைத்தையும் நான் சமூக வலை தளங்களில் வெளியிடுவேன்
என்று என்னை
மிரட்டினார் . மேலும் போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி திறந்து எனது உறவினர்களின் செல்போனுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பி வைத்து என்னை அதிர்ச் சியடைய செய்தார்.
இது குறித்து நான் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீசார் இடம் புகார் கொடுத்தேன். அங்கிருந்த போலீசார் யுவராஜிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் கொடுத்த புகாரை மாற்றி எழுதித்தருமாறு கூறினர். அப்படி எழுதிக் கொடுத்ததன் பேரில் யுவராஜ் மீது சாதாரணமாக வழக்கு பதிவு செய்தனர். யுவராஜ் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்து வட்டார். என்னை மிரட்டி வரும் அவரது மனைவி இன்னும் கைது செய்யப்பட வில்லை. அதே நேரத்தில் என்னைப்போல பாதிக் கப்பட்ட 62 பெண்களின் வீடியோக்களை யுவராஜ் மற்றும் அவரது மனைவி லேப்டாப்களில் பாதுகாத்து வைத்துக் கொண்டு பணத்துக்காக பல பெண்களை மிரட்டி வருகின்றனர். இவர்களது செல்போன் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதனை அழித்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார்.

