Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி தொகையை வழங்கிL தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கோரிக்கை

0

'- Advertisement -

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி தொகையை வழங்கிட வேண்டும்

Ad banner

திருச்சி கலெக்டருக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியத்தையும் பயிற்சி தொகையையும் உடனடியாக வழங்கிட திருச்சி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசியப் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெற்றது.

இந்தப் பணியை செவ்வனே முடிக்க ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கற்பித்தல் பணியையும் பார்த்துக் கொண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டப் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆகஸ்ட் 25 -ந் தேதியே முடித்து கொடுத்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணையில், முதல் கட்ட பணியை முடித்தவுடன் அதற்கான மதிப்பூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் மற்றும் பயிற்சித் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நேரத்துக்கு முன்பாகவே முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபணியை முடித்த ஆசிரியர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் அதற்கான மதிப்பூதியம் வழங்கப்படவில்லை

அதனை விரைந்து வழங்கிட திருச்சி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான நீலகண்டன் தெரிவித்துள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.