கிரடாய் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள் விற்பனை கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது:
கிரடாய் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள் விற்பனை கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது:
அறநிலை துறை அமைச்சர் திறந்து வைத்தார் …
திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற் றும் மனைகளுக்கான பேர்புரோ-2026 விற்பனை கண்காட்சி திருச்சி கலையரங் கில் இன்று தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது …
இந்த கண்காட்சியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்வில் திருச்சி கிரடாய் சேர்மன் மனோகரன், கிரடாய் தலைவர் நசுருதீன், செயலாளர் முகமது இப்ராஹிம், பொருளாளர் கார்த்திக், கண்காட்சி பேர்புரோ சேர்மன் இளமுருகன், கண்காட்சி செயலாளர் அலாவுதீன் தமிழ்நாடு க்ரடாய் துணை தலைவர் கோபிநாதன், ஸ்டேட் பேங்க் சென்னை சர்க்கிள் பொது மேலாளர் சஞ்சீவ் குமார், துணைப் பொது மேலாளர் சந்தீப் குமார் நாயக், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி ராஜ்குமார், எச்டிஎப்சி வங்கி பால முரளி கிருஷ்ணன் சின்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட் சியில் 32 கட்டுமான நிறுவனங்கள், உள் அலங்கார நிறுவனங்கள், கட்டுமான பொருட்கள் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டி எப்சி வங்கி உள்ளிட்ட 48 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன வீடு வாங்க வீட்டு கடன், நிதி ஆலோ சனை வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் ரூ. 30 லட்சம் முதல் ரூ.6 கோடி வரையிலான தனி வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இந்த கண்காட்சியில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அலங்கார நிறுவனங்கள்
பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நிகழ்வில் ஆலோசகர் ரவி,இணை செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

