26 வயது வித்தியாசத்தால் தாம்பத்திய உறவில் அவருக்கு நாட்டமில்லை, எஸ் ஐ கணவரை கள்ளக்காதலனுடன் எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போலீஸ் எஸ்.ஐ.யை தீ வைத்து எரித்துக் கொன்றதாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 58). இவர் கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பணி மூப்பு அடிப்படையில் சென்னை மாநகர காவல்துறையில் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் தன்னைவிட 26 வயது குறைவான செல்வராணி (வயது 32) என்பவரை திருமணம் செய்து, நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியல் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு ராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.
பிறகு முதல் மாடியில் செல்வராணி மற்றும் குழந்தைகள் தூங்க சென்றுவிட்டனர். வீட்டின் கீழ் தளத்தில் ராஜ் தூங்கிய போது, மாலை 4 மணி அளவில் ராஜ் அறையில் இருந்து புகை வந்ததாகவும், அதை பார்த்து செல்வராணி வந்து பார்த்த போது, கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராணி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் எஸ்ஐ ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அறை முழுவதும் போலீசார் சோதனை செய்த போது, அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அப்போது, செல்வராணி தனது கணவர் மீது போக்சோ வழக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருப்பதால், தினமும் அவர் அதை நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறி அழுதுள்ளார். இதனால் அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதும், அவரது கழுத்து பகுதியில் பலமாக இறுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் வந்ததால் போலீசார் எஸ்ஐ ராஜ் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அப்போது சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக ராஜ் வீட்டில் இருந்து வெளியேறி பைக்கில் வேகமாக சென்றது தெரியவந்தது. இது ராஜ் தற்கொலையில் போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. இதனால் போலீசாருக்கு செல்வராணி மீது சந்தேகம் வலுத்தது. பிறகு போலீசார் எஸ்ஐ ராஜ் குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், அப்பாவுக்கும், அம்மாவுக்கு தினமும் சண்டை நடக்கும் என்றும், இதனால் அம்மா அப்பாவிடம் சரியாக பேசமாட்டார் என்று தெரிவித்தனர். பிறகு போலீசார் செல்வராணியின் செல்போனை ஆய்வு செய்த போது, கடந்த சனிக்கிழமை மதியம் பல முறை தேவா என்பவருக்கு அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. உடனே செல்வராணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, தனது கணவரை ஆண் நண்பர் உதவியுடன் பெட்ரோல் ஊற்றி கொன்றேன் என்று ஒப்புக்கொண்டார். பிறகு செல்வராணியிடம் கணவரை கொலை செய்ய என்ன காரணம் என விசாரணை நடத்தினர்.
அப்போது தனது கணவரை கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் செல்வராணி அளித்துள்ளார். அதைதொடர்ந்து தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் தேவாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். செல்வராணி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனக்கு ராஜ் இரண்டாவது கணவர். எனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். எனக்கும் எனது முதல் கணவருக்கும் மகள் உள்ளது. நான் எனது மகளுடன் வசித்து வந்தேன். அப்போது எஸ்ஐ ராஜ் நட்பு கிடைத்தது. அவரும் திருமணம் ஆகாமல் இருந்ததால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அவர் எனது முதல் கணவருக்கு பிறந்த மகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்.
எனது எதிர்காலம் மற்றும் காவல்துறையில் பணியாற்றுவதால், ராஜ்க்கும் எனக்கும் 26 வயது வித்தியாசம் இருந்தாலும் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கும் ராஜிக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு ராஜிக்கும் எனக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணம் நடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எனது ஆசைப்படி அவர் என்னை வக்கீலுக்கு படிக்க வைத்தார். அதேநேரம் எனக்கு தற்போது 32 வயது தான் ஆகிறது. எனது கணவருக்கு 58 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக அவர், தம்பத்திய உறவில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தார். அதேநேரம் வீட்டின் அருகே உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் இருந்து அவர் தான் நிரபராதி என்று அனைத்து ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இருந்தாலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததால் அவருக்கு முற்றிலும் தாம்பத்திய உறவில் இருந்து விலவிவிட்டார். நான் அழைத்தாலும் அவர் மன உளைச்சலாக இருக்கிறது என்று பாதியில் எழுந்து சென்றுவிடுவார். இதற்கிடையே வழக்கறிஞராக நான் இருப்பதால், எனக்கு நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவரின் நட்பு கிடைத்தது. அவரிடம் அடிக்கடி பேசி வந்தேன். ஒரு கட்டத்தில் எனது வயது காரணமாக நான் தேவாவுடன் நெருங்கி பழகி வந்தேன். இது எனது கணவர் ராஜிக்கு தெரியவந்தது. அவர் தேவா உடனான தொடர்பை துண்டிக்கும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. எனது கணவர் வேலைக்கு சென்ற பின், தேவா வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் அவர் வீட்டின் அருகே சிசிடிவி கேமரா அமைத்து எங்களை கண்காணித்து வந்தார்.பிறகு நானும் தேவாவும் வெளியே சந்தித்து வந்தோம். காவல்துறையில் பணியாற்றுவதால் ராஜ் எங்களை எளிதாக கண்டுபிடித்து விடுகிறார். ஒரு கட்டத்தில் ராஜ் என்னை மிகவும் கேவலமாக பேசி, குழந்தைகள் முன்பே ஆபாசமாக திட்டினார். இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். பின்னர் ராஜ் குறித்து தேவாவிடம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு தேவா, சாப்பாட்டில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து, பிறகு பெட்ரோல் ஏற்றி எரித்து விடுவோம். போலீசாரிடம், ராஜ் மீது போக்சோ வழக்கு இருப்பதால், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார் என்று நம்ப வைத்துவிடலாம். யாருக்கும் சந்ேதகம் வராது என்று கூறினார்.
அதன்படி கடந்த சனிக்கிழமை ராஜை அழைத்து கொண்டு புரசைவாக்கம் சென்று குழந்தைகளுக்கு துணிகள் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டோம். அப்போது முதல் நாள் தேவா வாங்கி கொடுத்த தூக்க மாத்திரையை சாப்பாட்டில் கலந்து ராஜிக்கு கொடுத்தேன். அவரும் சாப்பிட்டு தூங்க சென்றார். குழந்தைகளை வீட்டின் முதல் மாடியில் தூங்க வைத்துவிட்டு, தேவாவுக்கு போன் செய்து சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டேன் என்று கூறினேன். பிறகு தேவா எனது வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜ் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, அவர் ஆழ்ந்த தூக்க நிலையில் இருந்தார். பிறகு திட்டமிட்டப்படி வாங்கி வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
ஒரு வேளை சத்தம் போட்டால் என்ன செய்வது என்று அவரது கழுத்தை கைரேகை தெரியாதப்படி துணியால் நெரித்தோம். பிறகு ராஜ் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொன்றோம். பிறகு தேவா அங்கிருந்து பைக்கில் சென்றுவிட்டார். நானும் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுவிட்டேன். பிறகு குழந்தைகளிடம் அப்பா அறையில் இருந்து புகை வருகிறது என்று கூறி நாங்கள் அலறியபடி ஓடி வந்தோம். அப்போது ராஜ் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். அதை குழந்தைகளும் பார்த்தனர். அருகில் இருந்தவர்களும் வந்து பார்த்து, தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடினேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிசிடிவி காட்சி, செல்போன் மூலம் நான் மாட்டி கொண்டேன். இவ்வாறு செல்வராணி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளானர்.

