திருச்சி புங்கனூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது .
திருச்சி திண்டுக்கல் ரோடு புங்கனூர் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது போலீசார் வருவதை பார்த்து அவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த மெய்யப்பன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

