Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செய்தி பதிவிட்ட போலி நிருபர் அக்பர்

0

'- Advertisement -

திருச்சி விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு – மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போலீசாரிடம் புகார்.காவல்துறை உதவி ஆணையர் விசாரணை .

Ad banner

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை சரவணன். இவர் 20 வருடத்திற்கு மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

 

இவர் தில்லைநகர் அடுத்துள்ள காந்திபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினார்.  நள்ளிரவு 2 மணி அளவில் சில சமூக விரோதிகள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீட்டில் வீசி உள்ளனர்.

இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து சமூக விரோதிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்த மாநகர மேற்கு மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் மற்றும் கட்சியினர் தில்லை சரவணன் வீட்டின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் உள்ள உறையூர் காவல்நிலைய துணை ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கட்சியினர் திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீசிய சமூக விரோதி மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தனர்.

காவல்துறை உதவி ஆணையர் விஜயகுமார் சிந்தை சரவணனிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் பழைய குற்றவாளி என்றும் அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது,இவர் மீது எந்த தவறும் இல்லை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சரவணன் இது தான் தவறு என எங்க பத்திரிக்கை எந்த வெப்சைட் என தெரியாத  ஒரு போலி நிருபர் அக்பர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது .இவர் மீது காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர் விசிகவினர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.